எம்மைப்பற்றி

உங்களுக்கு தெரியுமா?

நமது அமைப்பினால் என்ன செய்யவிருக்கிறோம்

பலதரப்பட்ட இந்த முயற்சிகளின் முதல் படியாக நம் காலடி எடுத்து வைக்க நினைப்பது / தெரிவு செய்வது உணவு உற்பத்தியாகும் தன்னிறைவை உள்ளகத்தே கொண்ட விவசாயமாகும். அதற்காக முதலில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களாகும். இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு முக்கியத்துவம்வழங்குவதற்கு எண்ணில் அடங்கா முன்னுரிமைகள் காரணமாகின்றன. எனவே இப்படி பட்ட விவசாயத்தை வடக்கு கிழக்கில் எப்படி எவ்வாறு எங்கு தொடங்கி எமது சிந்தனையை செயல்படுத்தலாம் என்பதை முடிந்தவரை விபரமாக விளக்குவோமேயானால்

ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள கள விவசாயிகளை ஒன்றுசேர்த்து தேவைக்கு ஏற்றவாறு குழுக்களாக பிரித்தல்.
ஒவ்வொரு குழுக்களையும் நில,நீர்,வசதிக்கேற்ப தகுந்த விவசாய முறையை பரிந்துரை செய்தல் /ஏற்படுத்திக்கொடுத்தல்.
பரிந்துரைத்த விவசாய முறைகளுக்குத்தேவையான உர,இயந்திர,நீர் வசதிகளை பரிந்துரை செய்தல் /ஏற்படுத்திக்கொடுத்தல்.
பரிந்துரைத்த விவசாய முயற்சியில் அவர்களுக்கு எவ்வகையிலும் நட்டம் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வழங்குதல், அவ்வாறு நட்டம் ஏற்படும் பட்சத்தில் ஏற்படும் நட்டத்தொகையுடன் இலாபத்தொகையையும் மானியமாக வழங்கப்படும்.
பரிந்துரைகளோடு நிறுத்தாமல் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தல்
அதாவது விவசாய முன் ஏற்பாடுகளான நிலத்தை உழுது பயன்படுத்துதல் வரம்பு கட்டுதல்என்பவற்றை எமது அமைப்பினுடாக இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திற்கோ மிக நவீனமான இயந்திரங்களை பவிப்பதன் மூலம் செய்து கொடுத்தல். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் மூலதன செலவு மட்டுப்படுத்தப்படும் அதேநேரம் குறிப்பிடத்தக்க நபர்களுக்கு எமது அமைப்பில் நிரந்தர வேலைவாய்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். அத்தோடு அவர்களுக்கு நட்டம் ஏற்படுதல் தவிர்க்கப்படும்/ குறைக்கப்படும். இதன் மூலம் நாம் கொடுக்க வேண்டிய மானியத்தின் தொகையும் குறைவடையும்.
மேலே குறிப்பிட்டுள்ளவாறு செயற்பாடுகளை உங்கள் சொந்த முயற்சியில் ஆரம்பித்து செய்வதற்கு ஏதற்காக இணையதளத்தை தேர்ந்தெடுத்தேர்கள்? நீங்கள் செய்யும் அல்லது செய்யவிருக்கும் செயற்பாடுகளை அனைவரும் பார்வையிடத்தக்கவாறு பதிவிட வேண்டிய அவசியம் என்ன?
இவ்வாறு பதிவிடுவதன் மூலம் உங்களை மக்கள் மத்தியில் பிரபல்யமடைய செய்வதற்கு முயற்சிக்கின்றீர்களா? அல்லது இதன் மூலம் நீங்கள் இலாபமூட்டும் நோக்கத்துடன் செயற்படுகின்றீர்களா? போன்ற பல கேள்விகள் உங்கள் மத்தியில் எழலாம் இவ் திட்டமானது ஆரம்பத்தில் சிறு தொகைபணத்துடன் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்படுகின்றது. இவ்வாறான பெரிய திட்டத்தை எவ்வாறு நீங்கள் முதலீடு செய்யும் சிறு தொகையை கொண்டு நடத்த முடிகின்றது? என்ற கேள்விகள் உங்கள் மத்தியில் எழலாம். அதற்கான விளக்கத்தை நாம் தொடர்ந்து பார்ப்போம்.
இவ்வாறான பெரியதிட்டங்களை ஒரு தனி மனிதராக முதலீடு செய்யும் வல்லமை எம்மிடத்திலேயோ அல்லது வேறு நபர்களிடமோ இல்லை. எனவே இது வெறும் ஆரம்ப முயற்சியே இவ் முயற்சியை உங்களிடம் கொண்டுவர முயற்சிக்கிறேன். எனவே இது எனது முயற்சி மட்டுமல்ல உங்கள் அனைவரது முயற்சியாக மாற்றமடையட்டும் அவ்வாறு அனைவரினதும் முயற்சியாக மாறுவதன் மூலம் வெகு விரைவில் எங்களுடைய திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்ற கூடியவாறு அமையும். இதற்காக நீங்கள் இதில் எவ்வாறு பங்கேற்கலாம் நீங்கள் இவ் இணையதளத்தில் உங்களை பதிவு செய்வதன் மூலம் எம்முடன் இணைத்து கொள்ளலாம்.
நீங்களும் என்னைப்போன்று வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து உங்கள் வீட்டிற்கும் உறவினர்களுக்கும் பணம் அனுப்பிய வண்ணம் இருக்கிறீர்கள் ஆனால் அவ்வாறு பணத்தை பெற்றுக்கொள்பவர்கள் பணப்பெருமதியை உணராது நீங்கள் படும் கஷ்டங்களை உணராது பணத்தை செலவழித்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை கடந்து செல்கின்றார்கள். எனவே இவ்வாறு நாங்கள் பணம் அனுப்புவதன் மூலம் அவர்களை எங்களில் தங்கியிருக்கும் சுய புத்தியற்ற ஒரு நபராக மாற்றுவதோடு அவர்களுடைய வாழ்க்கையை ஒருவழியில் அழிக்கின்றோம் என்றே சொல்லவேண்டும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு பிற நாடுகளிடம் இருந்து கடன்களை வாங்கி சொந்த உற்பத்தியை திட்டமிடாது காலத்தை கடத்திக்கொண்டிருந்தது இப்போது அதன் கடன் சுமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாட்டை அதழ பாதாளத்திற்குள் கொண்டு சென்றுதுள்ளதோ அதே போன்றதொரு நிலைமையை இலங்கை மக்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் அவர்களது உறவினர்கள் பணத்தை வழங்கி அவ் மக்களுடைய வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குகின்றனர்.
இவ்வாறான மன நிலை மாற்றப்பட வேண்டும் நமது மக்களை சொந்த காலில் நிற்க வைக்க வேண்டும் இதற்கு நாங்கள் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் படிப்பு நிலை வழங்க வேண்டும் மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடுவதை ஒரு சிறுமையான தொழிலாக நினைக்க கூடாது அத்துடன் உணவு உற்பத்தி செய்வதற்கு பல்வேறுபட்ட இலக்கு முறைகள் உள்ளன அவற்றை வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதன் மூலம் இலகுவானதாகவும் குறைந்த செலவுடனும் அதிக விளைச்சல்களை பெறலாம்
முதல் கட்டமாக இவற்றை ஒழுங்கு படுத்தி விவசாய உற்பத்தியை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கி தன்னிறைவடைய செய்தல் . பின்னர் மிகையான உற்பத்தி ஏற்படும் போது என்ன செய்யலாம்?என்ற கேள்வி உங்களிடம் ஏழலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மேலதிகாலமானஉற்பத்தி பொருட்கள் எமது நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டு அவை தகுந்த முறையில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்படும். மேலதிக உற்பத்தி பொருட்கள் இருக்கும் பயன்படாது வீணாவதிலும் பார்க்க அவற்றை பதப்படுத்தி பொதி செய்து வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மேலதிகமாக தேங்கியிருந்த உற்பத்தி பொருட்களின் அரைவாசி விலையேனும் நாம் பெற்று கொள்வேமேயானால் மேலதிக தேக்கத்தினால் ஏற்படும் நட்டம் அரைவாசியாகின்றது அதாவது நட்டத்தில் சிறிய அளவு இலாபம் எங்களுக்கு கிடைக்கின்றது. பதப்படுத்தல், பொதி செய்தல், ஏற்றுமதி செய்வதன் மூல,மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க படுகின்றது. பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் வீண்விரயமாகும் உணவின் அளவை குறைத்து எங்கயோ இருக்கும் ஒருவர் அதனை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
இவ்வாறான ஊக்குவிப்புக்கள் மற்றும் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களை சொந்த காலில் நிற்க வைப்பதுடன் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படாது அத்துடன் வெளிநாட்டவர்களுடைய சுமையும் குறைக்கபடுகின்றது. திடமான நிரந்தரமானஒரு தொழிலை ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு நாட்டை ஒரு வகையில் மேலுக்கு கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையுடன் நாம் இத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்

சுய முயற்சியுள்ள ஒரு வருங்காலத்தை உருவாக்கும் முயற்சி எம்மிடம் இருந்து